/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆயிரம் புதிய காலணிகளை அறிமுகப்படுத்திய 'வாக்கரூ'
/
ஆயிரம் புதிய காலணிகளை அறிமுகப்படுத்திய 'வாக்கரூ'
ADDED : ஜூலை 28, 2025 09:35 PM

கோவை; கோல்டுவின்ஸில் உள்ள மெர்லீஸ் ஓட்டலில் நடந்த, 'வாக்கரூ வர்த்தக எக்ஸ்போ' வில், தீபாவளியை முன்னிட்டு, 1000க்கும் மேற்பட்ட புதிய காலணி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழகத்தின் நம்பர் ஒன் காலணி உற்பத்தியாளரான வாக்கரூ நிறுவனம் புதுமையான வடிவங்களில், குறைந்த விலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, காலணி ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
நவ நாகரிக காலணிகள் ரூ.199 முதல் பல வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இலகுவாகவும், வளையும் வகையிலும் அனைத்து பணிச்சூழலிலும் பயன்படுத்துமாறும் வடிவமைக்கப்பட்டுள்ள காலணிகள், ரூ. 379 முதல் கிடைக்கிறது. வாக்கரூ ஸ்போர்ட்ஸ் வகை காலணிகள் தடகளத்திற்கும், உடற்பயிற்சி மையத்தில் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாக்கரூ நிறுவன நிர்வாக இயக்குனர் நவுஷாத், தமிழ்நாடு எப்போதும் வாக்கரூவின் முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. புதிய தயாரிப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.