/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடலுக்கும், மனதுக்கும் மருந்து தருகிறது 'வாக்கிங்'
/
உடலுக்கும், மனதுக்கும் மருந்து தருகிறது 'வாக்கிங்'
உடலுக்கும், மனதுக்கும் மருந்து தருகிறது 'வாக்கிங்'
உடலுக்கும், மனதுக்கும் மருந்து தருகிறது 'வாக்கிங்'
ADDED : ஆக 23, 2025 11:49 PM

உ டலை 'பிட்' ஆக வைத்துக் கொள்ள, பலர் தினமும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுகின்றனர். அதற்கான ரிசல்ட்டும் அவர்களுக்கு கிடைக்கிறது. நம் சிட்டியில் உள்ள சில பிரபலங்களிடம், அவர்களின் 'பிட்னெஸ் சீக்ரெட்' பற்றி கேட்டோம்.
23 ஆண்டுகளாக விடாமல், தினமும் மாலையில் ஒரு மணி நேரம், வாக்கிங் செல்கிறேன். நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, உள்ளம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். நடைபயிற்சியின் போது, அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, யோசித்து திட்டமிட்டு விடுவேன். அன்றைய தினம் செய்த காரியங்களையும் சரிபார்க்க உதவும். நடைபயிற்சி மனதுக்கும் சந்தோஷத்தை தரக்கூடியது.
உணவும் முக்கியமான ஒன்று. அளவாக சாப்பிட்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. சாதாரண உணவை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.
உணவில் சிறுதானியங்களை சேர்ப்பது வழக்கம். நமது பாரம்பரிய உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். துரித உணவு ஒருபோதும் எடுப்பதில்லை. முக்கியமாக, உணவில் எண்ணெயை குறைந்தளவே சேர்க்கிறேன்.
கனகராஜ்
துணை முதல்வர்
கோவை அரசு கலைக் கல்லுாரி

