/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்த வெளி கிணறுகள் சுற்றுச்சுவர் அமைக்கணும்
/
திறந்த வெளி கிணறுகள் சுற்றுச்சுவர் அமைக்கணும்
ADDED : ஜூன் 22, 2025 11:10 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஆபத்தான திறந்தவெளி கிணறுகளைக் கண்டறிந்து, சுற்றுச்சுவர், கிரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தென்னை சாகுபடிக்கு அடுத்தாற்போல, காய்கறி சாகுபடியும் செய்யப்படுகிறது. விவசாய விளை நிலங்களில், ஏராளமான திறந்தவெளி கிணறுகள் அமைந்துள்ளன.
சில விவசாய விளைநிலங்கள், சாலையோரத்தில் அமைந்திருக்கின்றன. சாலையோரம் விபத்து ஏற்பட்டால், கிணற்றில் விழுந்து பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. திறந்தவெளி கிணற்றில், சுற்றுச்சுவர், கிரில் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் கூறியதாவது: சாலையோரம் திறந்தவெளி கிணறுகள் இருந்தால், அது பயன்பாட்டில் உள்ளதா, தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும்.
மேலும், சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கம்பியால் ஆன கிரில் அமைத்து, நீராதாரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயன்பாடற்ற கிணறாக இருந்தால், மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.