/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கணுமா?
/
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கணுமா?
ADDED : அக் 08, 2024 12:23 AM
சீனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், சீனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு வரும், 11ம் தேதி நடக்கிறது.
கடந்த, 1984 செப்., 1 அன்றோ அல்லது அதன் பின் அல்லது, 31.8.2011க்கு முன் பிறந்த வீரர்கள் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
பங்கேற்க விரும்புவோர் தங்கள் விபரங்களை https://www.dcat.in/news என்ற மாவட்ட கிரிக்கெட் சங்க இணையதள பக்கத்தில் தங்களது சுயவிபரங்களை வரும், 10ம் தேதி, மாலை, 3:00 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், இத்தேர்வில் கலந்துகொள்ளாலாம். இது சம்பந்தமாக
மேலும் விபரங்களுக்கு 93442 07615 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -