/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பமா? 85 வயது முதியவர்களிடம் கருத்து கேட்க அறிவுரை
/
வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பமா? 85 வயது முதியவர்களிடம் கருத்து கேட்க அறிவுரை
வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பமா? 85 வயது முதியவர்களிடம் கருத்து கேட்க அறிவுரை
வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பமா? 85 வயது முதியவர்களிடம் கருத்து கேட்க அறிவுரை
ADDED : மார் 20, 2024 12:09 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில், 85 வயதுக்கு உட்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளதா என, கருத்துக்கேட்க ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது ஓட்டுக்களை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில் உள்ள, 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு அளிப்பது குறித்து விருப்பம் கேட்டறிய ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம், பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் நடந்தது. பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தபால் ஓட்டு அலுவலர் சசிரேகா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணன் பங்கேற்றனர்.
வால்பாறை தொகுதி ஆனைமலையில், தாசில்தார்கள் சிவக்குமார், வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி தொகுதியில், 85 வயது மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம், 2,155 பேர் உள்ளனர்.
வால்பாறை தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் ஆனைமலையில், 1,100, வால்பாறையில், 136 என மொத்தம், 1,236 பேர் உள்ளனர். ஆனைமலையில், 997, வால்பாறையில், 387 என மொத்தம், 1,384 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
இவர்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக சந்தித்து வீடுகளில் இருந்து தபால் ஓட்டுப்போட விருப்பம் உள்ளதா என கேட்டறிய வேண்டும். அவர்கள் கூறும் தகவல்களை சேகரித்து விபரங்களை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி தபால் ஓட்டுப்போட ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

