/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்: பொதுமக்கள் அதிருப்தி
/
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்: பொதுமக்கள் அதிருப்தி
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்: பொதுமக்கள் அதிருப்தி
குழாய் உடைப்பால் குடிநீர் விரயம்: பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஜன 15, 2024 12:27 AM

ஆனைமலை:ஆனைமலை அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாகியது.
ஆனைமலை அருகே ஆழியாறு அணையில் இருந்து, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வாயிலாக கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
அதில், கம்பாலபட்டி, ஜல்லிபட்டி, எஸ்.நல்லுார், தொண்டாமுத்துார், பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், கோட்டூர், சமத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, குடிநீர் வினியோகம் செய்ய, ஆழியாறில் இருந்து குழாய் வழியாக நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரதான குழாய் செல்லும் ஆலாங்கண்டி பகுதியில் நேற்று மாலை, 5:30 மணிக்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
அதிக அழுத்தத்துடன், 30 அடிக்கு மேல் நீர் சீறிப்பாய்ந்து, நீர் அரைமணி நேரத்துக்கு மேலாக விரயமாகியது. இவ்வழியாக சென்றோர், தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று, அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பருவமழை போதியளவு பெய்யாததால், அணைகளின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இந்நிலையில், கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில், இதுபோன்று உடைப்பு ஏற்பட்டால், தட்டுப்பாடு ஏற்படும்.
பல கிராமங்களில், குடிநீர் முறையாக வினியோகம் இல்லாததால் சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள், குடிநீர் குழாய்கள் நன்றாக உள்ளதா என கள ஆய்வு செய்து, கசிவு, உடைப்பு போன்றவை ஏற்பட்டால், நீர் விரயமாகாமல் தடுக்க, விரைந்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.