/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உழவர் சந்தை முன் கழிவு குவிப்பு; சுகாதார சீர்கேட்டால் வேதனை
/
உழவர் சந்தை முன் கழிவு குவிப்பு; சுகாதார சீர்கேட்டால் வேதனை
உழவர் சந்தை முன் கழிவு குவிப்பு; சுகாதார சீர்கேட்டால் வேதனை
உழவர் சந்தை முன் கழிவு குவிப்பு; சுகாதார சீர்கேட்டால் வேதனை
ADDED : ஜன 03, 2024 11:53 PM

உடுமலை : உடுமலை உழவர் சந்தையின் முன் காய்கறி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
உடுமலை உழவர் சந்தையில், நாள்தோறும் பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளையும் சுற்றுப்பகுதி விவசாயிகள் சந்தைப்படுத்துகின்றனர்.
அதிகாலை முதல் காலை, 10:00 மணி வரையிலும் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். காய்கறிகளை சந்தைப்படுத்தும் விவசாயிகள், அதன்கழிவுகளை வளாகத்தின் முன் கொட்டுகின்றனர்.
மீதமாகும் காய்கறிகள், மற்றும் காய்கறி கழிவுகள் உழவர் சந்தையின் முன் நாள்தோறும் மூட்டைகளாகவும் குவிக்கப்படுகிறது. இந்த கழிவுகளை உட்கொள்ள அருகிலிருந்து கால்நடைகளும் வருகின்றன.
நாள்தோறும் இங்கு கழிவுகள் இருக்கும் என்பதால், கால்நடைகளும் தவறாமல் வருகின்றன. பரபரப்பாக இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், கால்நடைகள் அங்கும் இங்குமாய் செல்வதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் விடுவதால், மழை பெய்யும் நாட்களில் அவற்றில் ஈக்கள் மொய்த்தும், கொசுக்கள் பரவியும் மிகுதியான துர்நாற்றம் நிலவுகிறது.
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டமும் செயல்படுகிறது. இருப்பினும், இக்கழிவுகள் உரமாக்குவதற்கு எடுத்து செல்லப்படுவதில்லை. சில நாட்களில் சந்தைக்கு பின்புறம் ரயில்வே ரோட்டில் கொட்டப்படுகின்றன.
காய்கறி கழிவுகளை முறையாக உரம் தயாரிக்கும் குடில்களில் கொண்டுசெல்வதற்கும், சந்தை வளாகத்தை சுற்றிலும் துாய்மையாக பராமரிப்பதற்கு நகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.