/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
/
கழிவு நீர் தேக்கம்: மக்கள் அவதி
ADDED : ஜூலை 04, 2025 10:26 PM

போத்தனுார்; கோவை மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் ஒரு பகுதியை ஒட்டி, மாநகராட்சி கழிவுநீர் பண்ணை உள்ளது. இடைப்பட்ட பகுதியில், அன்பு நகரின் எதிரே செட்டிபாளையம் சாலையில் துவங்கி, 2,0-25 அடி அகல ஓடை கோணவாய்க்கால்பாளையம் நோக்கிச் செல்கிறது. மழைக்காலத்தில் இந்த ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடும்; இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு கழிவுகள் செல்லும்.
பல ஆண்டுகளாக ஓடை துார்வாரப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்நகரின் ஒன்பதாவது வீதியின் இறுதியில் உள்ள கோவில் வரை சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குழாய் பதிக்கப்படவில்லை. சிறிது தொலைவுக்கு ஓடையையே காணவில்லை. பின், மீண்டும் ஓடை காணப்படுகிறது. இங்கு கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வருவதால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஓடையை முழுமையாக துார்வாரி, கழிவுநீர் செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஓடையில் தேங்கியுள்ள கழிவுநீரில், ஒரு மாடு சிக்கி இறந்ததுதான் மிச்சம், போர்வெல் தண்ணீர் மஞ்சளாக மாறி விட்டது. வரி மட்டும் கரெக்டா வாங்கிடுறாங்க' என்றனர்.