தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு உருவாக்க வேண்டும் திட்டம்.. தண்ணீர் வங்கி! விவசாயிகள் தெரிவிக்கும் யோசனை

அரசு உருவாக்க வேண்டும் திட்டம்.. தண்ணீர் வங்கி! விவசாயிகள் தெரிவிக்கும் யோசனை

அரசு உருவாக்க வேண்டும் திட்டம்.. தண்ணீர் வங்கி! விவசாயிகள் தெரிவிக்கும் யோசனை


UPDATED : ஜூலை 28, 2026 04:46 AM

ADDED : ஜூலை 27, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 04:46 AM ADDED : ஜூலை 27, 2026 07:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: 'பருவமழை பொய்த்ததால், விவசாய பொருட்களின் உற்பத்தி செலவு, 50 சதவீதம் அதிகரித்துள்ளது' என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, தொண்டாமுத்துார், சூலுார், அன்னுார் உள்ளிட்ட பல்வேறு ஊரக பகுதிகளில் காய்கறிகள், தென்னை, வாழை, சின்ன வெங்காயம், பாக்கு உள்ளிட்டவைகள் பயிர் செய்யப்படுகின்றன. பருவமழையை நம்பி விவசாயிகள் விளைப்பொருட்களை பயிரிட்டனர். ஆனால் தற்போது மழை பொய்த்ததால், கடும் சிரமத்தில் உள்ளனர். பயிர்களை காப்பாற்ற, நீரை வெளியில் இருந்து பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர். உரம் செலவும் அதிகரித்து, உற்பத்தி செலவு, 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது:-

மழை பெய்தால் இயற்கையாக கிடைக்கக்கூடிய தாது பொருட்கள் பயிர்களுக்கு கிடைக்கும். தற்போது மழையில்லாததால், உரம் அதிகம் இட வேண்டியுள்ளது. நிலத்தடி நீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது. நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஏக்கருக்கு 60 ஆயிரம் லிட்டர் வரை, தண்ணீர் வெளியில் இருந்து சுமார் ரூ.8 ஆயிரம் வரை வாங்கி பயிர்களுக்கு ஊற்றுகிறோம். மழை இன்றி தண்ணீர் ஊற்றினாலும், இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்து பயிருக்கு கிடைக்காததால், மகசூல் குறைந்துவிடும். சின்ன வெங்காயம் சாகுபடி படிபடியாக குறைந்துவிட்டது.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், வேளாண்மை துறையின் அனைத்து துறைகளும் செயல்பட்டு, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கலாம். ஆனால் அவர்களும் அமைதி காத்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட வேண்டிய ஆடி மாதம், வறட்சியில் உள்ளது. இதை தவிர்க்க, விவசாயிகள் தண்ணீரை சேமித்து அதை உபயோகப்படுத்த, பண்ணை குட்டைகள் அதிகரிப்பு, நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பம் என, தண்ணீர் வங்கி அதாவது வங்கிகளில் பல்வேறு வகைகளில் பணம் சேமிப்பது போன்று, தண்ணீரை சேமிக்க, இந்த வங்கி திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களில், காய்கறிகள், சின்ன வெங்காயம் என அனைத்து பயிர்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us