/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்' திட்டம் துவக்கம்
/
அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்' திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 10:13 PM

மேட்டுப்பாளையம்; காந்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'வாட்டர் பெல் திட்டம்' நடைமுறைப் படுத்தியதை அடுத்து, அனைத்து மாணவ, மாணவியரும் ஒரே நேரத்தில், தண்ணீர் குடித்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம் ஓடந்துறை ஊராட்சி, காந்திநகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி, 'வாட்டர் பெல் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது.
இதை அடுத்து காலை, 11:00 மணிக்கும், மதியம் ஒரு மணிக்கும், மாலை, 3:00 மணிக்கும் வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. அப்போது அனைத்து மாணவ, மாணவியர்களையும், தண்ணீர் குடிக்கும் படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த வாட்டர் கேனில் இருந்து, ஒரே நேரத்தில் அனைவரும் தண்ணீர் குடித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி பேசுகையில்,' உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் நீர் இன்றியமையாதது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க முடியும். இது நோய்களை தடுக்கவும் உதவுகிறது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது,' என்றார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி ஷர்மிளா பானு, ஆசிரியர்கள் உமா, அமல சிந்தியா, வனிதா ஆகியோர் பங்கேற்றனர்.