/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
/
குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
ADDED : பிப் 05, 2025 11:38 PM

மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும், மெயின் குடிநீர் குழாயும், கோவை மாநகராட்சிக்கு செல்லும் கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டு குடிநீர் திட்ட குழாயும் பதிக்கப்பட்டுள்ளன.
காரமடை தோலம்பாளையம் சாலையில், மருதய்யா நகர் பிரிவில், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரவு பகலாக பல லட்சம் லிட்டர் குடிநீர், வீணாக வெளியேறி வருகிறது. இது மருதூர் ஊராட்சியின் குடிநீர் குழாயா, அல்லது கோவை கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயா என தெரியாமல் உள்ளதால், ஊராட்சி நிர்வாகத்தினரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரங்களுக்கு மேலாக, குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த உடைப்பை சரி செய்ய எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.