/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., திட்ட அணைகள் நீர்மட்டம் உயர்வு; கை கொடுத்தது பருவமழை
/
பி.ஏ.பி., திட்ட அணைகள் நீர்மட்டம் உயர்வு; கை கொடுத்தது பருவமழை
பி.ஏ.பி., திட்ட அணைகள் நீர்மட்டம் உயர்வு; கை கொடுத்தது பருவமழை
பி.ஏ.பி., திட்ட அணைகள் நீர்மட்டம் உயர்வு; கை கொடுத்தது பருவமழை
ADDED : ஜூலை 15, 2025 08:43 PM
பொள்ளாச்சி; பருவமழை கை கொடுத்ததால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்வதால், விவசாயிகளிடம்நடப்பாண்டு சாகுபடிக்கு தடையின்றி நீர் வினியோகம் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பி.ஏ.பி., திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு தண்ணீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பாசன விவசாயிகள் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பருவமழையும் முன்கூட்டியே துவங்கியதால், பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 62 அடியாக உயர்ந்ததால், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு, மழை காரணமாக அணை நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த, 18ம் தேதி மொத்தம் உள்ள, 120 அடியில், 95 அடியாக உயர்ந்தது.
கடந்த, 21ம் தேதி, 100.40 அடியாக உயர்ந்தது. கடந்த, 28ம் தேதி 110.70 அடியாகவும், கடந்த, 3ம் தேதி 115.20 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் கடந்த, 8ம் தேதி 118 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 709 கன அடி நீர் வரத்து இருந்தது. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேறும் சூழல் இருந்தது. உபரிநீர் வீணாக்காமல் இருக்க, விவசாய பயன்பாட்டுக்காக கால்வாய் வழியாக திறக்கப்பட்டது.
கடந்த, ஆறு நாட்களுக்கு மேலாக, அணை நீர்மட்டம், 118 அடியாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் குளம், குட்டைகளுக்கு செல்வதால் குளம் குட்டைகளில் நீர் தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், அணையின் நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதால் இந்தாண்டு, தடையின்றி பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.