/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் உடைப்பு; சரி செய்யும் பணி தீவிரம்
/
குடிநீர் குழாய் உடைப்பு; சரி செய்யும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 18, 2025 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, குறிச்சி குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இதில், டி.இ.எல்.சி., சர்ச் அருகே சர்வீஸ் ரோட்டின் நடுவே குடிநீர் கசிவு ஏற்பட்டு, ரோட்டில் வழிந்தோடியது.
இதை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய பொக்லைன் இயந்திரம் வாயிலாக, குழி தோண்டி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நேற்று இரவு நடந்தது.