/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் வெளியேற்றம்
/
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் வெளியேற்றம்
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் வெளியேற்றம்
சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் வெளியேற்றம்
ADDED : ஜூலை 28, 2025 09:53 PM
கோவை; கோவை மாநகராட்சியின் மேற்குப்பகுதி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, கேரள வனப்பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் தேக்கும் மழை நீரே குடிநீர் ஆதாரம்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் அணை நிரம்புவது வழக்கம். உயரம் 50 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, 44.61 அடி வரை தான் இருப்பு வைக்க முடியும் என, கேரள நீர்ப்பாசன துறை தெரிவித்துள்ளது. அதனால், அணையின் நீர் மட்டம் உயரும்போது, மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஜூன் மாத மழையின்போது, நீர் மட்டம் உயர்ந்ததால், மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல், இப்போதும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்கிறது.
நேற்று காலை நிலவரப்படி, அணை பகுதியில் 86 மி.மீ மழை பதிவானது. நீர்மட்டம் 42.67 அடியாக இருந்தது.  மலையில் உருவாகியுள்ள சிற்றருவிகளில் பெருக்கெடுக்கும் நீர் வரத்தால் நீர் மட்டம் உயர்ந்ததால், மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

