UPDATED : நவ 04, 2026 10:29 AM
ADDED : நவ 04, 2026 10:24 AM
அ நிறம் | அளவு
கோவை: வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, கோவையில் அதிக மழை பெய்துள்ளது.
மாநகராட்சி முன்னெச்சரிக்கை, நிவாரண பணியை செய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவது குறித்து ஆய்வு செய்தது. அதிகம் பாதிக்கும் பகுதி, குறைவான பாதிப்புடைய பகுதி, வீட்டிற்குள் மழைநீர் புகும் இடங்கள் என்று இந்த பகுதிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளனர்.
