/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எடுக்கும் முடிவு நல்லதாக இருக்கும் நம்புகிறோம்
/
எடுக்கும் முடிவு நல்லதாக இருக்கும் நம்புகிறோம்
ADDED : செப் 10, 2024 11:51 PM

அகில இந்திய ஜவுளி சம்மேளன கூட்டமைப்பு ( சிட்டி) பருத்தி அபிவிருத்திக்கழக தலைவர் ராஜ்குமார்:
இந்தியாவில் விளையும் பருத்தி சர்வதேச அளவில் விளையும் பருத்தி விலையை விட அதிகமாக உள்ளது. சர்வதேச விலைக்கு இந்தியாவில் பருத்தி கிடைத்தால் தான் நாம், நுால் மற்றும் துணி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் உயர்ந்து நிற்க முடியும்.
அதற்கு ஆப் சீசன் என்று சொல்லப்படும் ஏப்.,முதல் செப்., மாதம் வரை இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அப்போது நாம் ஏற்றுமதித்துறையில் சர்வதேச அளவில் உயர்ந்து நிற்கமுடியும் அதற்கு மத்திய நிதியமைச்சகம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) தலைவர் சுந்தர்ராமன்:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் ஜவுளித்துறை;சர்வதேச நாடுகளுக்கு இணையாக உற்பத்தியையும் வர்த்தகத்தையும் கொடுக்க வேண்டுமென்றால்,
ஜவுளித்துறைக்கு தேவையான மூலப்பொருள் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும். இறக்குமதி வரியை நீக்குவதோடு, பருத்தி உற்பத்தியை பெருக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் (சீமா) தலைவர்
மிதுன்ராம்தாஸ்: நிதியமைச்சர் வருவதற்கு முன்னதாக இன்றே (நேற்று) துறைசார்ந்த அதிகாரிகள் வருகை தந்தனர். எங்களிடம் ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைகளை சொல்ல செவிமடுத்து கேட்டதோடு பதிவு செய்தனர். அதற்கான தீர்வையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
அதனால் மத்திய நிதியமைச்சகம் சிறு,குறு,நடுத்தர தொழில்கள் மீது எங்களது விவாதத்திற்கு பின்பு இன்று மத்திய நிதியமைச்சர் எடுக்கும் முடிவு நல்லதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

