/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்!'
/
'அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்!'
'அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்!'
'அ.தி.மு.க., ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கணும்!'
ADDED : ஜூலை 30, 2025 07:54 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை பட்டியலிட்டு எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசினார்.
கோவை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும் என சிறப்பு பூஜை, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் நடந்தது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஈஸ்வரன் கோவில் வீதி, தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
அப்போது, எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த, 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். பொள்ளாச்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், தி.மு.க., வின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என, துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகிகள் அருணாச்சலம், கனகு, மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.