/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தரணும்: கலெக்டர்
/
பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தரணும்: கலெக்டர்
பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தரணும்: கலெக்டர்
பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு தரணும்: கலெக்டர்
ADDED : டிச 03, 2024 06:48 AM
கோவை; ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்களுக்கு இணையதள வசதி வழங்குவதற்கான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மக்கள் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவையிலுள்ள, 228 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது.
கண்ணாடி இழை மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள, 228 ஊராட்சிகளில், 221 ஊராட்சிகளில் இணையதள வசதி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்துக்கான யு.பி.எஸ்., உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
கண்ணாடி இழை 85 சதவீதம், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர்.
இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. ஆகவே கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் தடை செய்யக்கூடாது.
விளைநிலங்களில் கண்ணாடி இழைகள் இணைக்கும் போது, பயிர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எவ்விதமான உலோகங்களும் இல்லை. ஆகவே இதை எடுத்து காசாக்காலாம் என்ற தவறான புரிதல் வேண்டாம்.
இத்திட்டம், முழுமையான செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.
அதனால் இத்திட்டத்துக்கு விவசாயிகளும், பொதுமக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.