/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முழு ஆயுளுக்கு தேவையான ஆரோக்கியம் பெற வேண்டும்'
/
'முழு ஆயுளுக்கு தேவையான ஆரோக்கியம் பெற வேண்டும்'
ADDED : ஜூன் 16, 2025 09:11 PM
கோவை; கோவை, வெள்ளலூர் உமாமகேஸ்வரர் கோவிலில், பேரூர் ஆதினத்தின் 24 சன்னிதானமாக திகழ்ந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 108 சிவலிங்க பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பக்தர்கள் சிவலிங்க திருமேனிகளுக்கு புனித தீர்த்தங்களால், அபிஷேகம் செய்வதை துவக்கிவைத்தார்.
பின், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசுகையில், ''அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அதே சமயம் முழுமையான ஆயுளுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் பெற்றிருக்க வேண்டும். அதற்காகவே அனைவரும் நலம் பெற வேண்டி சிவபூஜை நடந்தது. திருமால், நான்முகன் உள்ளிட்ட எல்லா தெய்வங்களும், சிவனைப் போற்றி வழிபாடு செய்துள்ளனர்,'' என்றார்.
இந்நிகழ்சியில் திரளான சிவனடியார்கள், மடாலயத்தார் பங்கேற்றனர்.