UPDATED : நவ 15, 2026 08:23 PM
ADDED : நவ 15, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
உடுமலை: மடத்துக்குளம் நால்ரோட்டில், போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள மடத்துக்குளம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அங்குள்ள நால்ரோட்டில், உடுமலை ரோடு, பழநி ரோடு கணியூர் ரோடு, குமரலிங்கம் ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கின்றன.
அங்கு ரவுண்டானா இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகளும் ஏற்படு வாய்ப்புள்ளது. எனவே, மடத்துக்குளம் நால்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, ரவுண்டானா அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
