/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பு செடிகளை வெட்டி சுத்தப்படுத்தணும்!
/
மையத்தடுப்பு செடிகளை வெட்டி சுத்தப்படுத்தணும்!
ADDED : ஏப் 29, 2025 09:24 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மேம்பால மையத்தடுப்புக்கு வெளியே வளர்ந்திருக்கும் செடிகளை வெட்ட வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், மேம்பால மைய தடுப்பு பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த செடிகளுக்கு அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது மையத்தடுப்பில் உள்ள செடிகள் வளர்ந்து, சர்வீஸ் ரோட்டிற்கு வெளியே நீட்டிய படி உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் உள்ள செடியின் கிளைகள் முட்களுடன் காணப்படுகிறது.
இதனால், பைக்கில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது, செடியில் உள்ள முட்கள் உரசி காயம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மக்கள் நலன் கருதி சர்வீஸ் ரோட்டிற்கு வெளிப்பகுதியில் வளர்ந்திருக்கும் செடியின் கிளைகளை உடனடியாக வெட்ட வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.