/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்னிமார் கருப்பராயர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும்!
/
கன்னிமார் கருப்பராயர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும்!
கன்னிமார் கருப்பராயர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும்!
கன்னிமார் கருப்பராயர் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கணும்!
ADDED : மே 17, 2025 04:21 AM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி கன்னிமார், கருப்பராய சுவாமி கோவிலுக்குள் செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றி, வழிபாடு நடத்திட அனுமதிக்க வேண்டும்,' என எம்.ஜி.ஆர்., நகர் பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனரிடம் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்., நகர் பகுதி பொதுமக்கள், நகராட்சி கமிஷனர் கணேசனை சந்தித்து, திருவிழா நடத்த அனுமதி கோரி வலியுறுத்தினர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள கன்னிமார், கருப்பராய சுவாமி கோவிலில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா நடத்தி வருகிறோம்.
கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் கோவிலில் உருவாரம் வைத்து கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அச்சமயத்தில் தனியார் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டுமான பணிகள் செய்ய தடை விதித்து உத்தரவு பெற்றார். கோவிலில் கட்டுமானப்பணிகள் செய்ய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கோவிலில் பலதரப்பட்ட மக்கள் வழிபட்டு வரும் சூழலில், குறிப்பிட்ட எங்களது சில சமுதாய மக்களை மட்டும் வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
நடப்பாண்டு, கோவிலுக்கு செல்லும் பூங்கா வழித்தடம் கோர்ட் உத்தரவுப்படி அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வழிபாடு செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இதற்கு நகராட்சி கமிஷனர், ''பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவில் உள்ளது. இந்நிலையில், தனிநபர் தொடர்ந்த வழக்கு காரணமாக, கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களது மனு குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி முடிவு காணப்படும்,'' என்றார்.