/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராந்திர ரயில் மார்ச் மாதம் வரை நீடிப்பு
/
வாராந்திர ரயில் மார்ச் மாதம் வரை நீடிப்பு
ADDED : ஜன 30, 2024 09:21 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில், மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும், திங்கட்கிழமை இரவு, 7:45 மணிக்கு இயக்கப்படும் இந்த ரயில், திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை காலை, 7:45 மணிக்கு சென்றடைகிறது.
அதேபோன்று ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்திற்கு திங்கள்கிழமை காலை, 7:30 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் கடந்த இரண்டு ஆண்டாக வாராந்திர ரயிலாகவே இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் கோவில்களுக்கு செல்லும், ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதனால் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் இயக்கப்படும் இந்த ரயிலை, தினமும் இயக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.