/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி முகாம்
/
பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி முகாம்
ADDED : ஜூன் 24, 2025 10:06 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடக்கிறது.
கிணத்துக்கடவு, தேவராயபுரம் ஊராட்சி வி.பி.ஆர்.சி., கட்டடத்தில் நாளை, 26ம் தேதியும், நாளை மறுநாளும் 'தொல்குடி' திட்டத்தின் கீழ், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் பங்கேற்கிறது. இதன் வாயிலாக மக்களுக்கு, பிறப்புச் சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்று, கிசான் கிரெடிட் கார்டு, காப்பீட்டு தொகை, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இத்தகவலை கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.
இதே போன்று, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், நாளை, 26ம் தேதியும், நாளை மறுநாளும் முகாம் நடக்கிறது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், வரும் 28ம் தேதி முகாம் நடக்கிறது.