/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை தடகள போட்டியில் சக்தி இன்ஜி., கல்லுாரி அணி 'சபாஷ்'
/
அண்ணா பல்கலை தடகள போட்டியில் சக்தி இன்ஜி., கல்லுாரி அணி 'சபாஷ்'
அண்ணா பல்கலை தடகள போட்டியில் சக்தி இன்ஜி., கல்லுாரி அணி 'சபாஷ்'
அண்ணா பல்கலை தடகள போட்டியில் சக்தி இன்ஜி., கல்லுாரி அணி 'சபாஷ்'
ADDED : அக் 23, 2025 11:32 PM

கோவை: அண்ணா பல்கலை, 9வது மண்டலத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் அவிநாசி ரோடு, சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் ராஜேஷ்வரி போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், வீரர்களுக்கான, 5,000 மீ., ஓட்டத்தில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியினர் முதல் இரு இடங்களையும், சி.ஐ.டி., கல்லுாரி வீரர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வீராங்கனைகளுக்கான 'ஹேமர் த்ரோ' போட்டியில் ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவி முதலிடம் பிடித்தார்.
சி.ஐ.டி., கல்லுாரி இரண்டாம் இடமும், கே.பி.ஆர்., கல்லுாரி மூன்றாம் இடமும் பிடித்தன. 400 மீ., ஓட்டத்தில் சி.ஐ.டி., கல்லுாரி முதலிடமும், கே.பி.ஆர்., இரண்டாம் இடமும், சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல், 10 ஆயிரம் மீ., ஓட்டத்தில் ஸ்ரீ சக்தி கல்லுாரி முதலிடமும், சி.ஐ.டி., கல்லுாரி இரண்டாம் இடமும், கே.பி.ஆர்., மூன்றாம் இடமும், 110 மீ., தடை தாண்டுதலில் ஸ்ரீ சக்தி முதலிடமும், ஆர்.வி.எஸ்., இரண்டாம் இடமும், சி.ஐ.டி., கல்லுாரி மூன்றாம் இடமும் பிடித்தன.
வீராங்கனைகளுக்கான, 400 மீ., தொடர் ஓட்டத்தில் ஸ்ரீ சக்தி, சி.ஐ.டி., பி.எஸ்.ஜி., ஐ.டெக்., ஆகியன முதல் மூன்று இடங்களையும், 400 மீ., தடை தாண்டுதலில் பி.எஸ்.ஜி., ஐ.டெக்., சி.ஐ.டி., பார்க் கல்லுாரி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

