/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு புறவழிச்சாலை பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அறிவுறுத்தல்

ADDED : மே 04, 2025 12:49 AM

கோவை: மேற்கு புறவழிச்சாலை பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சரவணன் அறிவுறுத்தினார்.
கோவை, மதுக்கரை அருகே துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., தூரத்திற்கு, மேற்குபுறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, மதுக்கரை முதல் செல்லப்பகவுண்டனூர் பிரிவு வரை, 11.80 கி.மீ., தூரத்திற்கு சாலைப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
புறவழிச்சாலையின் இருபுறமும் சர்வீஸ் ரோடு, மற்றும் உள்ளூர் இணைப்பு சாலைகளுக்கு செல்ல, அணுகு சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும், ஜூன் மாதம், பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சரவணன், மேற்கு புறவழிச்சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, சாலையின் மேல் மட்டம், கேம்பர், சாலையின் கனம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, கோவை கண்காணிப்பு பொறியாளர் (கட்டுமானம், பராமரிப்பு) ரமேஷ், கோட்டப்பொறியாளர்(கட்டுமானம், பராமரிப்பு) ஞானமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.