/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் கற்க வேண்டிய இரண்டு மந்திரங்கள் எவை?
/
மாணவர்கள் கற்க வேண்டிய இரண்டு மந்திரங்கள் எவை?
ADDED : பிப் 02, 2025 01:29 AM

''த ன்னம்பிக்கை, விடாமுயற்சி - இந்த இரண்டு மந்திரங்களையும், மாணவர்களுக்கு சரியாக கற்பித்து விட்டால் போதும்; அவர்கள் கல்வியில் மட்டுமல்ல, அனைத்திலும் சாதனை படைப்பார்கள்,'' என்கிறார் ஆசிரியர் சகுந்தலா.
கோவை பீளமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளியின், தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சகுந்தலா. இவர் பள்ளி மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வரையில், 'கற்கை நன்றே' என்ற வழிகாட்டி நுாலை, எழுதி இருக்கிறார்.
''நான் 34 ஆண்டுகளாக ஆசிரியர் பணியை, ஒரு தவம் போல் செய்து வருகிறேன். அன்பால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.
''கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களை தண்டிக்கும் எண்ணம் வரக்கூடாது. அவர்களுக்கு புரியும் வகையில், பாடங்களை கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
அவர் எழுதிய, 'கற்கை நன்றே' நுால் பற்றி கூறுகையில், ''ஒரு விஷயத்தை சொல்லி புரிய வைப்பதை விட, அதை புத்தகத்தில் படித்து புரிந்து கொள்ளும் போது, மனதில் எளிதாகபதியும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய இரண்டு மந்திரங்களையும் மாணவர்களுக்கு சரியாக கற்பித்து விட்டால் போதும்; அவர்கள் கல்வியில் மட்டுமல்ல, அனைத்திலும் சாதனை படைப்பார்கள்,'' என்று உறுதியாக பேசினார் ஆசிரியர் சகுந்தலா.