/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாலுகா ஆபீசில் நடந்தது என்ன? புகார் குறித்து போலீஸ் விசாரணை
/
தாலுகா ஆபீசில் நடந்தது என்ன? புகார் குறித்து போலீஸ் விசாரணை
தாலுகா ஆபீசில் நடந்தது என்ன? புகார் குறித்து போலீஸ் விசாரணை
தாலுகா ஆபீசில் நடந்தது என்ன? புகார் குறித்து போலீஸ் விசாரணை
ADDED : டிச 25, 2024 10:07 PM
ஆனைமலை; ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், குடிபோதையில் வந்த நபர், ரகளையில் ஈடுபட்டதும்; அவரை வருவாய்துறையினர் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், ஆதார் அட்டையில் மாற்றம் செய்வதற்காக, ஒருவர் அவரது அம்மா, மகனுடன் வந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் இருந்தவர், ஆவணங்கள் ஏதுமின்றி ஆதார் அட்டையில் மாற்றம் செய்து தர கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதில், வருவாய்துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சில வருவாய் ஊழியர்கள், அந்த நபரை தாக்குவதும், தாலுகா அலுவலகமே களேபரமாக காணப்படுவது போன்று வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, வருவாய்துறை அதிகாரிகள், ஆனைமலை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அதில், அங்கலகுறிச்சியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகவும், ராணுவ வீரர் எனக்கூறிக்கொண்டு தகாத வார்த்தையால் பேசி ஒரு மணி நேரம் வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரிப்பதாக ஆனைமலை போலீசார் தெரிவித்தனர்.

