PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM
விவாகரத்து கேட்டு கணவன், கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் சம்மன் அனுப்பியும், மனைவி தரப்பில் ஆஜராகாமல் இழுத்தடித்தால், நீதிமன்றம் எந்த மாதிரியான உத்தரவு பிறப்பிக்கும்? கணவனுக்கு சாதகமாக, ஒரு தலைபட்சமாக தீர்ப்பு அளிக்கப்படுமா?
நீதிமன்றத்திலிருந்து மனைவிக்கு சம்மன் அனுப்பப்படும். சம்மனை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், கணவனுக்கு சாதகமாக ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும்.
ஒருவேளை சம்மனை பெற்றுக்கொள்ளாமலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் வழக்கை இழுத்தடித்தால், வழக்கறிஞர் அறிவிப்பு வெளியிடவும், மனைவிக்கு மெயில் அனுப்பவும், வழக்கு வாய்தா தொடர்பாக, பொது அறிவிப்பு வெளியிடவும், நீதிமன்ற அனுமதி பெறலாம்.
அனுமதி கிடைத்தவுடன் அவற்றை நிறைவேற்றி, கோர்ட்டில் சமர்ப்பித்தால், குடும்ப நீதிமன்றமானது கணவனுக்கு சாதகமாக, ஒரு தலைபட்சமாக முடிவு செய்யும்.
இந்தியாவை சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வசித்து வரும்போது, அங்கிருந்து இந்தியாவிலுள்ள காவல் நிலையத்திற்கு, இ-மெயில் வாயிலாக புகார் அளிக்க முடியுமா?
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்-2023, ( பிஎன்எஸ்எஸ்) சட்டப்பிரிவு 173-ன் கீழ், உலகத்தில் எந்த ஒரு பகுதியிலிருந்தும், இ-மெயில் வாயிலாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம். அதிகாரிகள் அதை பெற்று, ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்ப வேண்டும் என்பது சட்டம்.
- வக்கீல் ஆர்.சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.