/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒன் டே' சுற்றுலாத்திட்டம் என்னாச்சு! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
/
'ஒன் டே' சுற்றுலாத்திட்டம் என்னாச்சு! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
'ஒன் டே' சுற்றுலாத்திட்டம் என்னாச்சு! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
'ஒன் டே' சுற்றுலாத்திட்டம் என்னாச்சு! மீண்டும் செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜன 19, 2024 12:05 AM

வால்பாறை : வால்பாறைக்கு 'ஒன் டே' சுற்றுலா திட்டத்தில், மீண்டும் வேன் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வால்பாறையில், அரிய வகை வனவிலங்குகள், பிரசித்தி பெற்ற கோவில்கள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனதிட்ட அணைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை மாறாக்காடுகள், பசுமையான தேயிலை தோட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
தமிழக சுற்றுலாத்துறையில் வால்பாறையும் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக 'ஒன் டே' சுற்றுலா திட்டத்தின் கீழ், கோவையில் இருந்து பொள்ளாச்சி, ஆழியாறு வழியாக வால்பாறைக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றுலா பயணியர் அழைத்து வரப்படுகின்றனர். சுற்றுலா வேனில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு, 1,150 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் பல்வேறு பகுதிகளை சுற்றுப்பார்க்க வசதியாக இருந்தது. இத்திட்டம் வால்பாறை வர்த்தக வளர்ச்சிக்கும் கைகொடுத்தது.
வால்பாறையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி திட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழைக்கு பின், தற்போது குளுகுளு சிசன் துவங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கோவை - வால்பாறை இடையே 'ஒன் டே' சுற்றுலாத்திட்டத்தின் கீழ் மீண்டும் வேன் இயக்க வேண்டும்,' என்றனர்.
சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறைக்கு 'ஒன் டே டூர்' திட்டத்தின் கீழ், 15 சுற்றுலா பயணியரை அழைத்து வருகிறோம். கோவை தமிழ்நாடு ஒட்டலில் இருந்து, காலை, 7:00 மணிக்கு புறப்படும் சுற்றுலா வேன், பொள்ளாச்சி, ஆழியாறு, கவியருவி, அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம் வழியாக வால்பாறை வரை செல்லும்.
வால்பாறை நகரில் சிறிது நேர ஓய்வுக்கு பின், அக்காமலை பாலாஜி கோவில், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, சோலையாறு அணை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணியரை அழைத்துசெல்கிறோம்.
கடந்த சில மாதங்களாக போதிய அளவு 'புக்கிங்' இல்லாததால், 'ஒன் டே டூர்' திட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்த பின், வழக்கம் போல் கோவை - வால்பாறை இடையே சுற்றுலா வேன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

