sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?

/

வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?

வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?

வீடு கட்ட துவங்கும் முன் எந்தெந்த விஷயத்தில் 'அலர்ட்' ஆக இருக்கணும்?


ADDED : ஜூலை 26, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு கட்ட துவங்கும் முன் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார், கோவை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் லட்சுமணன்.

- வி.சம்பத், ஆர்.எஸ்.புரம்.

அஸ்திவாரம் எழுப்பி வீடு கட்டுவது, துாண்கள் எழுப்பி வீடு கட்டுவது ஆகியவற்றில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் என்னென்ன?


அஸ்திவாரம் போட்டு வீடு கட்டுவதை, 'லோடு பேரிங் ஸ்ட்ரக்சர்' என்று ஆங்கிலத்தில் கூறுவர். இந்த முறையில் வீட்டின் மொத்த எடை (dead load + live load) சுவரின் வழியாக மட்டுமே அஸ்திவாரத்தை (foundation) சென்றடையும்.

சாதக அம்சங்கள்


இதில், செங்கல் அல்லது கருங்கல் மட்டும் பயன்படுத்தி சுவர் எழுப்பி வீடு கட்டுவதால், துாண், அதற்கு உபயோகப்படுத்தப்படும் கான்கிரீட் மற்றும் கம்பிகள் தேவையில்லை. இதனால் வீட்டின் செலவு குறையும். இந்த முறையில் வீடு கட்டுவதால், Formed structure ஐ விட குறைவான காலத்தில், வீடு கட்டி முடிக்க முடியும்.

இது ஒரு பழமையான மற்றும் எளிமையான வீடு கட்டும் முறை. எனவே, இதற்கு குறைந்தளவிலான உபகரணங்கள் போதும்.

பாதக அம்சங்கள்


1. இதில் சுவர் மூலம் மொத்த எடையும் தரைக்கு செல்வதால், கீழ் தளத்தில் எந்த இடத்தில் சுவர் இருக்கிறதோ, மேல் தளத்தில் அதே இடத்தில் சுவர் எழுப்ப வேண்டும். சுவரை (அறையை) மாற்றி அமைக்க முடியாது.

2. இந்த முறையில் அதிகபட்சம், இரண்டு மேல் தளங்கள் மட்டுமே அமைக்க முடியும்.

3. கடினமான மண் நான்கு அல்லது ஐந்து அடிக்குள் இருக்கும் இடத்தில் மட்டுமே, இம்முறையில் வீடு கட்டுவது சாத்தியம்.

4. வீட்டின் அனைத்து சுவர்களுமே, ஒன்பது இன்ச் அகலம் உள்ளதாக அமைக்க வேண்டும்.

துாண்கள் மற்றும் பீம் வைத்து கட்டுவது: இதில் மொத்த எடையும், சிலாப், பீம், காலம் வழியாக பவுண்டேஷன் சென்றடையும்.

- ரா.மாரிமுத்து, ஊட்டி.

2. புதிதாக வீடு கட்ட எண்ணியிருக்கிறேன். என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் ?


வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பே, கட்டட பிளான் மற்றும் பட்ஜெட் இறுதி செய்து கொள்ள வேண்டும். ஹாலின் அளவு முடிந்தளவு பெரிதாக வைத்துக் கொள்ள வேண்டும். டைனிங் ஹால் இடமிருந்தால் தனியாக வையுங்கள். இடம் இல்லாவிட்டால், ஹாலில் அதற்கு போதிய இடம் ஒதுக்க வேண்டும். சமையல் மேடை மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவற்றுக்கு சரியாக திட்டமிட வேண்டும்.

எத்தனை படுக்கை அறை வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து கொள்ள வேண்டும். படுக்கை அறைக்கு தனித்தனி பாத்ரூம்கள், ஒரு பொது பாத்ரூம் வைத்தால் வசதியாக இருக்கும். சிறிய பூஜை அறை இருந்தால் நன்றாக இருக்கும். பிற தேவைகள் மனதில் கொண்டு கூடுதல் அறைகள் கட்டலாம். வீட்டுக்கு முன்புறம் இடம் இருந்தால் போர்ட்டிகோ கட்டலாம்.

ஒயரிங் செய்யும் போது, போதியளவு convenient sockets/pulg points வைத்துக் கொள்ளுங்கள். நேரடி மேற்பார்வை, கட்டுமான கட்டுப்பாடு மற்றும் பொருட்களை பரிசோதித்து கட்டுமான தரத்தை உறுதி செய்ய வேண்டும். முழுமையான செயல்திட்டம் தயாரித்து, அதன்படி செலவுகளை கணக்கிட வேண்டும்.






      Dinamalar
      Follow us