/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பெற்றோர் தர வேண்டியதென்ன?
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பெற்றோர் தர வேண்டியதென்ன?
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பெற்றோர் தர வேண்டியதென்ன?
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பெற்றோர் தர வேண்டியதென்ன?
ADDED : செப் 25, 2024 12:15 AM
கோவை : ''மனதில் ஊனத்தை வைத்தால்தான் ஊனம்; அவர்களுக்கே மருத்துவம் தேவை,'' என, 'ஹட்கோ' இயக்குனர் சபிதா பேசினார்.
ஹவுசிங் அண்டு அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிட்(ஹட்கோ) மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) சார்பில், ஒண்டிப்புதுாரில் உள்ள ஸ்டார் ஸ்பெஷல் பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீல் சேர், காது கேட்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 62 மாணவர்களுக்கு, 102 உபகரணங்கள் வழங்கப்பட்டன.
'ஹட்கோ' இயக்குனர் சபிதா உபகரணங்கள் வழங்கி பேசுகையில், ''மனதில் ஊனத்தை வைத்தால்தான் ஊனமே தவிர; உடலில் ஊனத்தை வைத்தவர்கள் அல்ல. மனதில் ஊனத்தை வைத்தவர்களுக்கே, மருத்துவம் தேவை. இந்த வாழ்நாள் மிகவும் அழகானது.
''இறைவனின் இந்த மகத்தான குழந்தைகளுக்கு, பெற்றோர் தரவேண்டியது தன்னம்பிக்கைதான்,'' என்றார்.
'ஹட்கோ' செயல் இயக்குனர் சுப்ரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திர மோகன், ஸ்டார் ஸ்பெஷல் பள்ளி முதல்வர் எலிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.