/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு? அரசிடம் கேட்கிறது 'ஜாக்டோ - ஜியோ' n மறியல் போராட்டம் நடத்தி எச்சரிக்கை
/
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு? அரசிடம் கேட்கிறது 'ஜாக்டோ - ஜியோ' n மறியல் போராட்டம் நடத்தி எச்சரிக்கை
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு? அரசிடம் கேட்கிறது 'ஜாக்டோ - ஜியோ' n மறியல் போராட்டம் நடத்தி எச்சரிக்கை
தேர்தல் அறிக்கையில் சொன்னது என்னாச்சு? அரசிடம் கேட்கிறது 'ஜாக்டோ - ஜியோ' n மறியல் போராட்டம் நடத்தி எச்சரிக்கை
ADDED : ஜன 31, 2024 12:22 AM
கோவை;கோரிக்கைகளை வலி யுறுத்தி, கோவை மாவட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த, 900 பேர், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என, போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; 'அவுட் சோர்சிங்' நியமன முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளடக்கிய, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், அரசின் கவனத்தை ஈர்க்க, பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்ட குழுவினர் கூறியதாவது:
ஜாக்டோ - ஜியோ கூட்டு நடவடிக்கை குழு கோவை மாவட்டம் சார்பில், ஒரு நாள் அடையாள மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து, தமிழக அரசு பேச்சு நடத்தாவிட்டால், பிப்., 15ல் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
அதன் பிறகும் நிறைவேற்றாவிடில், தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில், பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் ஒட்டுமொத்தமாக இயங்காது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போராட்டத்தில், 450 பெண்கள் உட்பட, 900 பேர் பங்கேற்றனர். இவர்களில், 693 பேர் கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சாலமன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.