/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட்டுக்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது?
/
கோர்ட்டுக்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது?
ADDED : மார் 13, 2024 01:40 AM

அன்னுார்;அன்னுார் கோர்ட்டுக்கு, சொந்த கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை வடக்கு தாலுகாவில் இருந்து, 2012ல் அன்னுார் தனி தாலுகா உருவானது. இதையடுத்து அன்னுாரில் கோர்ட் அமைக்க வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, அன்னுாரில் 2023 மார்ச் 11ம் தேதி கோர்ட் அமைக்கப்பட்டு, செயல்பட துவங்கியது.
அதுவரை சிவில் வழக்குகளுக்கு, கோவை கோர்ட்டுக்கும், கிரிமினல் வழக்குகளுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கும் சென்று வந்த அன்னுார் பொதுமக்கள் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்து அன்னுார் கோர்ட்டுக்கு சென்று வருகின்றனர். எனினும் அன்னுார் கோர்ட்டுக்கு இது வரை சொந்த கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்படவில்லை. கட்டடம் கட்டப்படவில்லை.
இது குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறுகையில், 'தற்போது அன்னுாரில், சத்தி ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், வாடகை கட்டடத்தில் கோர்ட் செயல்பட்டு வருகிறது. அன்னுார் கோர்ட் துவக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. வழக்கறிஞர்களுக்கு போதுமான அறைகள் இல்லை. எனவே அரசு அன்னுார் கோர்ட்டுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

