/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வழித்தடங்களை துார்வாரும் பணி எப்போது துவங்கும்? மழைக்குள் முடிக்குமா பொதுப்பணித்துறை
/
நீர் வழித்தடங்களை துார்வாரும் பணி எப்போது துவங்கும்? மழைக்குள் முடிக்குமா பொதுப்பணித்துறை
நீர் வழித்தடங்களை துார்வாரும் பணி எப்போது துவங்கும்? மழைக்குள் முடிக்குமா பொதுப்பணித்துறை
நீர் வழித்தடங்களை துார்வாரும் பணி எப்போது துவங்கும்? மழைக்குள் முடிக்குமா பொதுப்பணித்துறை
ADDED : ஏப் 12, 2025 11:29 PM

தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தில் உள்ள நீர் வழித்தடங்களை, தூர்வாரும் பணி துவங்கப்படாமல் உள்ளதால், மழைக்காலத்திற்கு முன் பணிகள் முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆயிரக்கணக்கான சிற்றோடைகள் மற்றும் ஓடைகள், தொம்பிலிபாளையத்தில் இணைந்து, கோவையின் ஜீவ நதியாக விளங்கி வரும் நொய்யல் ஆறு உருவாகிறது.
இங்கிருந்து, பெருக்கெடுக்கும் நொய்யல் ஆறு, அதன் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், இரண்டு வாய்க்கால்களை உருவாக்கி, நொய்யல் ஆறு தொடர்ந்து பயணிக்கிறது. இந்த நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் மூலம் கோவையில் உள்ள குளங்களுக்கும், குட்டைகளுக்கும் நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நீர் வழித்தடங்களை முறையாக தூர்வாரி பராமரிக்காததால், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில், தங்கு தடையின்றி நீர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
நீர் வழித்தடங்களை தூர்வாரி, புனரமைக்க, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தூர்வாரும் பணிகள் இன்னும் துவங்காததால், மழைக்காலத்திற்குள், பணிகள் முடிக்கப்படுமா என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலை செம மட்ட கால்வாய், பரம்பிக்குளம் பிரதான கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், வால்பாறை, மேட்டுப்பாளையம், மதுக்கரை உள்ள பகுதிகளில், நீர் வழித்தடங்கள் மற்றும் தடுப்பணைகளை, சுமார், 50 கோடி ரூபாய் மதிப்பில், தூர்வாரி புனரமைக்கும் பணிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது, கூடுதலாக, சித்திரைச்சாவடி அணைக்கட்டு, சாமளாபுரம், பள்ள பாளையம், மங்கலம், ஆண்டிபாளையம் ஆகிய ஆறு அணைக்கட்டுகளும், பேரூர் படித்துறையை, 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தின் இரண்டாம் பகுதியில் இணைத்து புனரமைக்க வேண்டி, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற்று அடுத்த மாதம் பணிகள் துவங்கப்படும். விரைந்து பணிகள் முடிக்கப்படும்' என்றனர்.