/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு போட்டிகளில் எந்த அணிக்கு சாம்பியன்ஷிப்?
/
விளையாட்டு போட்டிகளில் எந்த அணிக்கு சாம்பியன்ஷிப்?
விளையாட்டு போட்டிகளில் எந்த அணிக்கு சாம்பியன்ஷிப்?
விளையாட்டு போட்டிகளில் எந்த அணிக்கு சாம்பியன்ஷிப்?
ADDED : மார் 23, 2025 11:08 PM
கோவை : இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், 'ஏ' அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 27வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. ஏ, பி, சி, டி என நான்கு அணிகளாக மாணவ, மாணவியர் , 100 மீ., 200, 400, 800 மீ., தொடர் ஓட்டம், வாலிபால், எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். இதில், ஏ அணி, 139 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
இரண்டாம் இடத்தை, 124 புள்ளிகளுடன் பி அணி பிடித்தது. மாணவியர் பிரிவில் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை ரீத்து, மாணவர் பிரிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை கவுதம்கிருஷ்ணா ஆகியோர் வென்றனர்.
மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். இந்துஸ்தான் கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.