தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘குப்பை கிடங்கு பிரச்னையில் வெள்ளை அறிக்கை வேண்டும்’

‘குப்பை கிடங்கு பிரச்னையில் வெள்ளை அறிக்கை வேண்டும்’

‘குப்பை கிடங்கு பிரச்னையில் வெள்ளை அறிக்கை வேண்டும்’


UPDATED : அக் 28, 2026 07:21 PM

ADDED : அக் 28, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 07:21 PM ADDED : அக் 28, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வெள்ளலுார் குப்பை கிடங்கால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் நிலையில் நிரந்தர தீர்வு காண சி.வி.சி. வலியுறுத்தியுள்ளது.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை(சி.வி.சி.) தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘குப்பை கிடங்கால் குறிச்சி, வெள்ளலுார் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண்பதுடன், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நகரங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் ‘ஏர் ஹாரன்’ அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிப்பதில் திட்டமிடப்பட்ட காலக்கெடுவைவிட மிகவும் பின்தங்கியே உள்ளது’ என கூறியுள்ளனர்.

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் செப்டிக் டேங்க், கழிவுநீர் ஓடைகளுக்குள் இறங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களை இன்னும் காணமுடிகிறது. இது பணியாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும்; இதை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us