/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநங்கையை கொலை செய்தது யார்? இருவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
/
திருநங்கையை கொலை செய்தது யார்? இருவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
திருநங்கையை கொலை செய்தது யார்? இருவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
திருநங்கையை கொலை செய்தது யார்? இருவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
ADDED : பிப் 01, 2024 01:28 AM

வடவள்ளி:கோவை மருதமலை அடிவாரத்தில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூரை சேர்ந்தவர் திருநங்கை தனலட்சுமி,39. கோவை, தெலுங்குபாளையம், எல்.ஐ.சி., காலனியில் தங்கியிருந்தார்.
மருதமலை அடிவாரம் அன்னை இந்திரா நகரில் உள்ள திருநங்கை மாசிலாமணி,33 என்பவர் வீட்டில், கடந்த 25ம் தேதி முதல் தங்கியிருந்தார்.
கடந்த 29ம் தேதி இரவு தனலட்சுமி, மாசிலாமணி, மாசிலாமணியின் நண்பர் மணி ஆகிய மூவரும் உணவு சாப்பிட்டனர். பின் மாசிலாமணியும், மணியும் வெளியில் சென்றனர்.
வெகுநேரம் கழித்து வீடு திரும்பியபோது, தனலட்சுமி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்து, போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் ரவிகுமார், வடவள்ளி இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் தலைமையிலான போலீசார், வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் மோப்பநாய், வீட்டின் அருகிலுக்கு பிரதான சாலை வரை சென்று திரும்பியது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, மாசிலாமணி மற்றும் மணியிடம் விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'தனலட்சுமி உடலில், 27 இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. கொலையாளியை கண்டுபிடிக்க, 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.,க்கள் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநங்கை மாசிலாமணி, மணி ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்குரிய ஒரு நபர் நடமாடுவது தெரிந்தது'என்றனர்.