/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபரை மிரட்டி கார் பறித்தது யார்?
/
வாலிபரை மிரட்டி கார் பறித்தது யார்?
ADDED : பிப் 10, 2024 11:57 PM
கோவை;கோவை ரத்தினபுரி போலீசாரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர், தன்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் உள்ள ஒரு சர்ச் அருகே, சிலர் மிரட்டி காரை பறித்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார். அங்கு நின்றிருந்த பிரபு, 35, என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனது காரை பறித்து சென்றது குறித்து கூறியுள்ளார்.
போலீசார், அவர் கூறிய வாகன பதிவெண்ணை வைத்து தேடினர். அதில் கார் காந்திபுரம் பகுதியில் நின்றிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து காரை பறித்து பாதியில் நிறுத்தி சென்றது யார், அவர்கள் எதற்காக காரை பறித்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.