/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யார் அந்த சார்?' பைக்கில் ஸ்டிக்கர்
/
'யார் அந்த சார்?' பைக்கில் ஸ்டிக்கர்
ADDED : ஜன 20, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் நடந்த எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், அ.தி.மு.க.,வினர் பைக்குகளில் 'யார் அந்த சார்?' என, ஸ்டிக்கர் ஒட்டினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே நடந்த, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 108ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில், அ.தி.மு.க.,வினர் தி.மு.க., அரசை விமர்சிக்கும் வகையில், தங்கள் பைக்குகளில் 'யார் அந்த சார்?' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினர்.

