/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்லடம் ரோட்டை விரிவுபடுத்த தயங்குவதேன்! நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்
/
பல்லடம் ரோட்டை விரிவுபடுத்த தயங்குவதேன்! நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்
பல்லடம் ரோட்டை விரிவுபடுத்த தயங்குவதேன்! நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்
பல்லடம் ரோட்டை விரிவுபடுத்த தயங்குவதேன்! நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 12, 2025 09:56 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து பல்லடம் ரோடு குறுகலாக மாறியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகிவிட்டது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. அதில், பல்லடம் ரோடு, தேர்நிலையம் சந்திப்பு விரிவாக்கம்; உடுமலை ரோடு அஞ்சலக அலுவலகம் அருகே ஜங்ஷன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தாலுகா அலுவலகம் ரோடு முதல் நியூஸ்கீம் ரோடு வரையும், அஞ்சலக அலுவலக ரோட்டிலிருந்து, சப் - கலெக்டர் அலுவலகம் வரையும்; பஸ் ஸ்டாண்ட் சிக்னல் முதல் நகராட்சி அலுவலகம் வரையும் ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.
மேலும், இருபுறமும் தலா, 11 மீட்டர் என, மொத்தம், 22 மீட்டருக்கு ரோடுகள் அகலப்படுத்தப்பட்டன. நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லவும், பாதசாரிகள் செல்லவும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதில், பல்லடம் ரோடு வாணியர் மடம் அருகே இருந்து, நியூஸ்கீம் ரோடு செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. இந்த ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பல்லடம் ரோட்டில், மாவு விற்பனை கடைகள், உணவுக்கடைகள், வணிக கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த ரோட்டில் தேர்நிலையம் அருகேயும், நியூஸ்கீம் ரோடு அருகேயும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட பகுதி குறுகலாக உள்ளது.
கடைக்கு வரும் வாகனங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தம் செய்வதால், மற்ற வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. அவசர தேவைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, மற்ற பகுதியை விரிவாக்கம் செய்தது போல, இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.