/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகலமாக போகிறது 96ம் வார்டு சங்கம் வீதி வரும் 22ல் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் 'துாள்'

ADDED : பிப் 20, 2025 06:14 AM
போத்தனூர்; கோவை மாநகராட்சியின், 96வது வார்டுக்குட்பட்டது சங்கம் வீதி. நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ள இப்பகுதிக்கு செல்லும் பிரதான குறுக்கு சாலை சுமார், 20 அடி அகலமுடையது.
ஆனால் துவக்கம் முதலே, சாலையின் இருபுறமும் கட்டடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதனால், அவசர காலத்தில் வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தக் கோரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதியில் வசிக்கும் ஈஸ்வரமூர்த்தி மனு அனுப்பினார்.
அதனடிப்படையில் வரும், 22 (சனிக்கிழமை) காலை, 10:30 மணிக்கு அளவீடு பணி மேற்கொள்ளப்படும் என, மதுக்கரை வட்ட சார் ஆய்வாளர் ஈஸ்வரமூர்த்திக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'சம்பந்தப்பட்ட பூமியிலும், எல்லையிலும் உரிமை உள்ளவர்கள், தக்க ஆவணங்களுடன் ஆஜராகி கொள்ளவும். நில உரிமையாளர்கள் புதர் மற்றும் வேலிகளை அளவையின்போது நீக்கி தர வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நீண்ட காலமாக இப்பிரச்னை இருந்து வருகிறது. தற்போது தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்' என்றனர். சாலையை அளக்கும்போது, அப்பகுதியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரிசர்வ் சைட்டையும் மீட்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.