/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மணிமண்டப சுவரை இடித்த காட்டு யானை
/
மணிமண்டப சுவரை இடித்த காட்டு யானை
ADDED : ஜூன் 06, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை; ஆனைமலை அருகே, மணிமண்டப சுற்றுச்சுவரை காட்டுயானை இடித்து தள்ளியது.
ஆனைமலை அருகே, ஆழியாறு - வால்பாறை ரோட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது உலா வருகின்றன.இந்நிலையில், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு ஆழியாறு பகுதிக்கு வந்த, ஒற்றை யானை, கட்டி முடிக்கப்பட்ட மணி மண்டப சுற்றுச்சுவரை இடித்தது. மணிமண்டப வளாகத்தில் உள்ள மாமர கிளையை முறித்து, பழங்களை சாப்பிட்டது.
தொடர்ந்து, ஆழியாறு விருந்தினர் மாளிகை அருகே யானைகள் முகாமிட்டு உலா வருகிறது. இதனால், சுற்றுலா பயணியர் பாதுகாப்புடன், கவனமாக செல்ல வேண்டும், என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.