/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செங்குளத்தில் தண்ணீர் கசிவை தடுக்குமா களிமண்? ஆய்வு செய்ய வருகிறது ஐ.ஐ,டி.,குழு
/
செங்குளத்தில் தண்ணீர் கசிவை தடுக்குமா களிமண்? ஆய்வு செய்ய வருகிறது ஐ.ஐ,டி.,குழு
செங்குளத்தில் தண்ணீர் கசிவை தடுக்குமா களிமண்? ஆய்வு செய்ய வருகிறது ஐ.ஐ,டி.,குழு
செங்குளத்தில் தண்ணீர் கசிவை தடுக்குமா களிமண்? ஆய்வு செய்ய வருகிறது ஐ.ஐ,டி.,குழு
ADDED : டிச 11, 2025 05:09 AM

குனியமுத்துார்: குனியமுத்துார் அருகே உள்ள செங்குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. அ.தி.மு.க., ஆட்சியின் போது இக்குளம் துார்வாரப்பட்டு, கரையை பலப்படுத்த கற்கள் பதிக்கப்பட்டன.
துார்வாரியபோது, ஆழமாக மண் அள்ளியதால், குளத்தில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கினால், அருகாமையில் உள்ள தோட்டங்களில் நீரூற்று ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களில் தண்ணீர் பொங்குவது வாடிக்கையாகி விட்டது. அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். களிமண் கொட்டி கரையை பலப்படுத்தினால், நீர்க்கசிவு ஏற்படாது என, ஆலோசனை வழங்கப்பட்டது.
காளப்பட்டி பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில் கட்டடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியபோது, கிடைத்த களி மண்ணை லாரிகளில் எடுத்து வந்து கொட்டுகின்றனர்.
குளத்தின் கரையில் குவியல் குவியலாக, களிமண் கொட்டப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக அவை கரைக்கு கீழ் கொட்டப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நீர்க்கசிவு தடுக்கப்படும் என அதிகாரிகள் நினைக்கின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''செங்குளத்தில் அதிக தண்ணீர் தேங்கும் போது, 87, 88, 89 ஆகிய வார்டு பகுதிகளில் கசிவு ஏற்படுகிறது. சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்து, களிமண் கொட்டினால் கசிவு ஏற்படும் இடங்களில் பரவி, அடைத்து விடும் என ஆலோசனை கூறினர். பரீட்சார்த்த முறையில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். 15 நாட்கள் கழித்து ஐ.ஐ.டி., குழு கோவை வந்து, குளப்பகுதியிலும், நீர்க்கசிவு ஏற்படும் இடங்களிலும் ஆய்வு செய்யும்,'' என்றார்.

