/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பால் மாயமாகும் ரோடு களஆய்வு செய்வாரா கலெக்டர்
/
ஆக்கிரமிப்பால் மாயமாகும் ரோடு களஆய்வு செய்வாரா கலெக்டர்
ஆக்கிரமிப்பால் மாயமாகும் ரோடு களஆய்வு செய்வாரா கலெக்டர்
ஆக்கிரமிப்பால் மாயமாகும் ரோடு களஆய்வு செய்வாரா கலெக்டர்
ADDED : மே 10, 2025 02:54 AM
வால்பாறை : வால்பாறை நகரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளை கட்டுப்படுத்த, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுலாபயணியர் அதிகளவில் வரும் வால்பாறை நகர் பகுதி, ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. அதனால், அனைத்து வாகனங்களும் பிரதான ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும், ரோட்டில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரில் தான், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இதனால், எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நகருக்கு மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வால்பாறையில் பிரதான ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வரும், 14ம் தேதி வால்பாறையில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமுக்கு வரும் மாவட்ட கலெக்டர், நேரடியாக ஆய்வு செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.