/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் நடைமுறை துவங்கும் முன் காற்றாலை 'டெண்டர்' வெளியாகுமா?
/
தேர்தல் நடைமுறை துவங்கும் முன் காற்றாலை 'டெண்டர்' வெளியாகுமா?
தேர்தல் நடைமுறை துவங்கும் முன் காற்றாலை 'டெண்டர்' வெளியாகுமா?
தேர்தல் நடைமுறை துவங்கும் முன் காற்றாலை 'டெண்டர்' வெளியாகுமா?
UPDATED : ஜூலை 12, 2025 08:15 AM
ADDED : ஜூலை 12, 2025 04:24 AM

சென்னை: 'தமிழக கடல் பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிக்கு 'டெண்டர்' கோர, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின்கடிதம் எழுத வேண்டும்' என தொழில் துறையினர் விரும்புகின்றனர்.
வெளிநாடுகளில் இருப்பது போல நம் நாட்டிலும், கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சாதகமான சூழல்
முதல் கட்டமாக,குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களின் கடலுக்குள் காற்றாலை மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழக கடல் பகுதியில் மட்டும், 35,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம்அமைக்க, சாதகமான சூழல் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குஜராத் கடல் பகுதிக்குள், 500 மெகா வாட் காற்றாலை மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் டெண்டர் கோரியது.
தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டது; ஆனால் நடக்கவில்லை.
இது குறித்து,காற்றாலை மின் திட்ட முதலீட்டாளர்கள் கூறியதாவது:
தமிழக கடல் பகுதிக்குள் அமைக்கப்பட உள்ள காற்றாலை மின் நிலையத்தில், 2,000 மெகா வாட் மின்சாரத்தை, யூனிட் 4 ரூபாய்க்கு வழங்குமாறு, மத்திய மின் துறைக்கு, இரு ஆண்டுகளுக்குமுன்னரே மின் வாரியம் கடிதம் எழுதி விட்டது.
இயற்கையாகவே குஜராத்தை விட, தமிழக கடல் பகுதிகளில், அதிக நாட்களுக்கு காற்றாலை மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் உள்ளது; 1,000 மெகா வாட்டுக்கு மின் உற்பத்தி செய்யமுடியும்.
முதலில் தமிழக கடலுக்குள் மின் நிலையம் அமைக்க டெண்டர் கோரியிருந்தால், நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருக்கும். வரும் ஆண்டில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கடிதம்
அந்த சமயத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், மின் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும்.
எனவே, உடனடியாக டெண்டர் கோர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின்கடிதம் எழுத வேண்டும். அப்போது தான், அத்திட்ட பணிகளை விரைந்து துவங்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.