/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எரியாத 'பல்பு'களை மாற்றுவார்களா? தீராத உறக்கத்தில் அதிகாரிகள்
/
எரியாத 'பல்பு'களை மாற்றுவார்களா? தீராத உறக்கத்தில் அதிகாரிகள்
எரியாத 'பல்பு'களை மாற்றுவார்களா? தீராத உறக்கத்தில் அதிகாரிகள்
எரியாத 'பல்பு'களை மாற்றுவார்களா? தீராத உறக்கத்தில் அதிகாரிகள்
ADDED : செப் 08, 2025 10:04 PM
பொள்ளாச்சி; கோட்டூர் பஸ் ஸ்டாப் ஒட்டிய ரயில்வே மேம்பாலத்தில், பல மாதங்களாக 'பியூஸ்' போன 'பல்பு'களை மாற்றாமல் இருப்பது, துறை ரீதியான அதிகாரிகளின் அலட்சியப் போக்கை வெளிக்காட்டுகிறது.
பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிப்பாக, கிராம மக்கள் மட்டுமின்றி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சென்றும் திரும்பும் சுற்றுலாப் பயணியரும், இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படும். ரயில்வே மேம்பாலத்தில், இருபுறமும் கம்பங்கள் அமைத்து, மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல பல்புகள், பியூஸ் போனதால், இரவு நேரத்தில், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பல மாதங்கள் கடந்தும், பழுதடைந்த பல்புகளை மாற்றி, புதிய பல்புகள் பொருத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேம்பாலம் சுவரில் போஸ்டர் ஒட்டவும், அரசியல் கட்சியின் சுவர்விளம்பரம் எழுதவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பல்புகள் எரியாதது குறித்து யாரும் கண்டுகொள்வதில்லை.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படும் போது, வாகனங்கள் முந்திச் செல்ல முற்படுகையில் விபத்து ஏற்படுகிறது. அவ்வப்போது, சிலர், மேம்பாலத்தில் நடந்து செல்லும்போது, வாகனங்கள் மோதவும் வாய்ப்புள்ளது. பழுதான விளக்குகளை மாற்றியமைக்க நகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.