sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விருப்பமா? விண்ணப்பிக்க போலீசார் அழைப்பு

/

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விருப்பமா? விண்ணப்பிக்க போலீசார் அழைப்பு

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விருப்பமா? விண்ணப்பிக்க போலீசார் அழைப்பு

ஊர்க்காவல் படையில் சேவை செய்ய விருப்பமா? விண்ணப்பிக்க போலீசார் அழைப்பு


ADDED : பிப் 07, 2024 11:08 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில், சேவை செய்ய தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியிருப்பதாவது:

மாவட்ட போலீசாருக்கு உதவியாக, தன்னார்வலர்களாக கோவில் மற்றும் இதர பாதுகாப்பு பணியில், தங்களுடைய ஓய்வு நேரத்தில் இணைந்து, ஊர்க்காவல்படையில் சேவை செய்ய தகுதியுள்ளோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல், 50 வயதுக்குள்ளான இருபாலர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய இடங்களில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகங்களில் நாளை (9ம் தேதி) வரை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்வி தகுதிக்கான மதிப்பெண் பட்டியல், ஆதார் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனிலோ, எஸ்.பி., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊர்க்காவல்படை அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் வரும் 11ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படாது. விண்ணப்பத்தின் அடிப்படையில், உடல் தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக, தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவர்.

அரசுப்பணியாளர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 98430 - 65575, 73735 - 53745 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us