/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திர அலுவலகங்கள் முன் மாந்திரீக பூஜையால் பரபரப்பு
/
பத்திர அலுவலகங்கள் முன் மாந்திரீக பூஜையால் பரபரப்பு
பத்திர அலுவலகங்கள் முன் மாந்திரீக பூஜையால் பரபரப்பு
பத்திர அலுவலகங்கள் முன் மாந்திரீக பூஜையால் பரபரப்பு
ADDED : நவ 25, 2025 05:49 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் சுற்றியும், 40க்கும் மேற்பட்ட பத்திர அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் முன்பு தரை தளம், முதல் தளம் ஆகியவற்றில் பத்திர அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகம் முன்பு ரோட்டில், நேற்று காலை அறுக்கப்பட்ட வெள்ளைப் பூசணிகாய், வாழை இலையில் வைத்து, குங்குமம் தடவப்பட்டு, சுற்றிலும் பூக்கள், வாழை பழம், எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை அறுத்து அதில் எண்ணெய் தீபம் ஏற்றிய நிலையில் இருந்தது.
சாதாரணமாக திருஷ்டி கழிப்பவர்கள் வெறும் பூசணிக்காயில் குங்குமத்தை தடவி, நடுரோட்டில் உடைப்பது வழக்கம். அது வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் நடத்துவது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பத்திர அலுவலகங்கள் முன்பு நடத்தப்பட்ட இந்த பூஜை, மாந்திரீக பூஜையாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பத்திர எழுத்தர்கள் கூறுகையில்,' இப்பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்டு இருக்கலாம். யார் நடத்தினர், எப்போது நடத்தினர் என்ற விவரம் தெரியவில்லை. தொழில் போட்டியா எனவும் புரியவில்லை. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு இதே போல பூஜை நடந்தது குறிப்பிடத்தக்கது' என்றனர்.

