/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை கடையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் 88 பவுன் கைவரிசை
/
நகை கடையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் 88 பவுன் கைவரிசை
நகை கடையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் 88 பவுன் கைவரிசை
நகை கடையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் 88 பவுன் கைவரிசை
ADDED : செப் 09, 2025 10:36 PM
கோவை; கோவையில் நகைக்கடையில், ரூ.72 லட்சம் மதிப்பிலான 88 பவுன் நகை திருடிய ஊழியர்களை போலீசார் தேடுகின்றனர்.
வெரைட்டி ஹால் ரோடு, சாமி ஐயர் புது தெருவை சேர்ந்தவர் நிர்மல் குமார் மண்டல், 55; ஜுவல்லரி உரிமையாளர். இவரது கடையில், ஜூன் மாதம், மேற்குவங்கத்தை சேர்ந்த மானிக் துட்டா, 29 மேலாளராக சேர்ந்தார். அவரிடம், கடை சாவி ஒப்படைக்கப்பட்டது. இவர், தனது ஊரை சேர்ந்த துட்டான் துாலி, 30 என்பவரை பணியமர்த்தினார்.
இருவரும் பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே, கடையில் இருந்த, 708.250 கிராம் எடையுள்ள மூன்று தங்க நெக்லஸ்கள் காணாமல் போயின. மதிப்பு ரூ.72 லட்சம். இருவரும் நகைகளை திருடியது தெரியவந்தது.
தற்போது மாயமாக உள்ள இருவரின் மொபைல் போன்கள், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளன. வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் தேடுகின்றனர்.